By Vidhya Lakshmi
வெள்ளை உடையை தரித்து,
சமாதானத்தின் தூதராய் இருந்து,
வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சர்வவல்லவர்,
தேவர்கள்,தூதர்கள் போற்றும் தூயவர்,
அவரின் தங்க சிம்மாசனத்தை விட்டு,
மனிதர்களின் மத்தியில் பிறந்து,
தீங்குகளுக்கு எதிர்த்து,
அதிசயங்களை செய்து,
போராட்டங்களை ஜெயித்து,
குருடருக்கும், செவிடருக்கும் நம்பிகை தந்து,
அனைவருக்கும் அவருள் இரட்ச்சிப்பு தந்து,
ஒரு எளிய மேய்ப்பன் சகல ஜனங்களுக்கும் உதாரணமாய் இருந்து,
பொறுமை, அன்பு , உண்மைக்கு அடையாளமாய் இருக்கவும்,
நீடித்த வாழ்வுடன் பூமியில் கழிக்கூர்ந்து இருக்கவும்,
தீங்குக்கு திகையாமல் நம்பிக்கை உடையவர்களாய் இருக்கவும்,
கற்று கொடுத்த மகிமையின் ராஜாவை,
எப்பொழுதும் பணிவுடன் தொழுகிறோம்.