ஒரு நொடி பா ' இறகுகள் – Delhi Poetry Slam

ஒரு நொடி பா ' இறகுகள்

By Thangavelu Chinnasamy 

 

'கண்டு கேட்டு வாழும் மக்கள் 
உண்டு உடுத்தி உயிர்த்து வாழ
அண்டும் அண்டம் சுற்றிய பகுதி
ஆண்டு பலவாயினும் பற்றிய விண்மீன்கள்.

விண்மீன் கோள்கள் பறக்கும் 'இறகுகள்'
மண்மீது நின்று பயிலும் பழக்கம்
விண்ணுலக பார்வை பாதுகாப்பு இயக்கம்
வண்ண வண்ண கோளத்தின் சுழற்சி.

சுழற்சி முறை இலக்கு குறியீடு
பழகி பார்த்து பறக்க இயலும்
மழலை மொழி பேசும் சொல்லில்
வழங்கும் இயல்பில் ஒளிரும் வெளிச்சம்.

வெளிச்சம் போட்டு காட்டும் வட்டம்
அளிக்கும் வகையில் பரப்பில் நிலவும்
பளிச்சிடும் வெண்மை நிலவியல் கோடு
களித்து இன்புற வேண்டிய கதிரொளி.'


1 comment

  • Thanks for your information.,

    Thangavelu Chinnasamy

Leave a comment