நீள் தூர உறவு – Delhi Poetry Slam

நீள் தூர உறவு

By Rajalakshmi Chandrasekaran

மருந்தென்றே நாம்
ஒருவருக்கொருவர் !
காயத்திற்கும் ஒவ்வாமைக்கும்
அருமருந்தாக
இருப்பது போல்.
நமது வாழ்க்கை..!!
ஒத்துப் போகிறோம்
ஒருவருக்கொருவர்..அளவாக
அவ்வப்போது மட்டும்
அருகில் இருந்து பாவித்தல்
மிகவும் சிறப்பு..
உணவாய் உட்கொண்டு
நித்தமும் நிதமும் பருகினால்
மருந்தின் வாடை
சூழ்ந்தே இருக்கும்
பிணியாளரை போல் I
சோர்ந்து விடுகிறோம்.
சுற்றம் மறுத்து ..
சுகம் மறுத்து ..
சுவை மறுத்து ..
தனிமை சிறப்பென்ற முடிவுக்கு
உள்ளானோம்..
நம் நலம் பேணும்
மருந்தென்றே நாம்
ஒருவருக்கொருவர் !
நலமென்று இருப்போம்.
நீடூழி வாழ்வோம்.


Leave a comment