பொக்கிஷம் – Delhi Poetry Slam

பொக்கிஷம்

By Nirmala Chandrasekar

அம்மா அப்பா 

ஆர்வ கோளாறு வயசு

இல்லறம்

ஈன்ற பிள்ளைகள்

என வாழ்க்கை சக்கரத்தில்

ஏராளமான பிரச்னைகளுடன்

ஐம்புலன்களுடன்

உற்சாகமாக

ஊரார் உற்றாருடன் கை கோர்த்து

ஒரு வரியில் சொல்ல முடியாத
பல விஷயங்கள் சந்தித்த காலம்
அது

ஓய்வெடுக்கும் வயோதிக்க காலத்தில்

ஔவை தந்த நெல்லிக்கனியாய்

அஃகாலம் நம் அனைவரின் பொக்கிஷம்
பொத்திக்காப்போம்


Leave a comment