By Manoj J
முடியுமென்பவனுக்கு வானிடியும் முழங்கி அவனை வரவேற்கும்.
அந்த அகண்ட கடல் கூட அவன் கால் வைக்க பிரிந்து நிற்கும்.
திறக்காத கதவுக் கூட அவன் கை வைக்க திறந்து நிற்கும்.
அவன் செல்லும் பாதையெல்லாம் நேர்மறை அதிர்வுடன் செல்வான்.
முயற்சியே அவன் ஆயுதமாகும்.
அவ்வாயுதத்தினால் வரும் தடைகளை உடைத்தெறிந்து,
அத்தடைகளை, தன் படைகளாக்கி முன் செல்வான்.
முடியாதென்பவனுக்கு எதுவுமே கிடையாது.
அந்த நெருப்பை உமிழும் சூரியன் கூட விடியாது.
அந்த முடியாது என்ற உலகில் எதுவுமே கிடைக்காமல்,
வாழ்வு விடியாமல் அலைவான்.
நினைவில் கொள்.
எதுவும் முடியுமென்பதை மனதில் நிறுத்து,
தீயவைகளை அறுத்து,
நற் சிந்தனையை மனதில் நிறுத்து,
செல்லும் இருள் வழியெங்கும் விளக்கேற்றி,
உன் இலக்கை நோக்கி மன ரதத்தை செலுத்து...