By Natarajan A.M.S
இளந்தளிர் கண்டேன்
இனிமை தரும் துளிர் கண்டேன்
நந்தவனம் குலுங்கக் கண்டேன் நடுநடுவே பூக்களைக் கண்டேன்.
பெண் இனத்தின் பெருமை கண்டேன்
பெண்மையில் அவள் மலரக் கண்டேன்
மலர்போல மணக்கக் கண்டேன்
மலர்வாள் என்றே பெண்ணாய் கண்டேன்.
நீரழிவு மருந்தாமே இடுகாட்டில் ஊரறிந்த பூவாமே சுடுகாட்டில் நித்யகல்யாணி என்றே வயக்காட்டில் நித்தமும் வாழுதய்யா நம் நாட்டில்.
சரும பிரச்சனைகளை சரிசெய்ய அறிவாய் பூக்குது சாமந்தி.
தலைவலி தலைக்குத்தான்....எனக்கில்லை செவ்வந்தி இருக்கும்வரை கவலையில்லை.
வா!வா! என்றழைக்கும் சூரியகாந்தி
போ!போ! என்கிறது இதயநோயை.
தாழம்பூவின் அசத்தியம் அறிந்து
அழுத்தம் என்றே சிவனின் தான்றுரை
"என் கோவிலில் உனக்கு இடமில்லை. சற்றே நீ வெளியேறு"
கித்தாப்பாய் பூத்திருக்கும் உத்தூழ் பூவே தித்திப்பின் கண்ணுறலாய் ரோஜாவே
இதழ்விரித்து கனவு காணும் தாமரையே இருட்டி விட்டால் கவலை ஏதும்
வரலையே?
மை இட்ட மங்கை அவள்
மனம் வீசும் கங்கை அவள்
வெள்ளை நிறக் கிள்ளை அவள்
வேண்டுவோர்க்கு பிள்ளை அவள்
துகில் உறியும் மல்லிகை அவள்
தூண்டுவோருக்கு மருந்து அவள்.
அலங்கும் இதழ்களால்
அறிவு செறிந்த பூ,
புல்லிய உடையணிந்து
கில்லி போல் சடையணிந்து
கொண்டைக்காரி தலையிலே
கெண்டை மீன்போல் அமர்ந்தவளே!
படப்பையிலே பூத்திருக்கும்
நெய்தல் பூவே ....
கடைவிரித்து விற்பவளும்
தொடை கட்டி விற்கின்றாள்
ஆனாலும் நீ ....
ஆண்டவனுக்கு ஏற்றவளல்ல
ஆகவே .... நீ திரும்பிப் போ.
பாவலர்: ஏ.எம்.எஸ். நடராஜன், மதுரை