By Krisnita Kamalakannan

சிறு துண்டு காகிதங்களில் ,
என் எண்ணங்களை வண்ணமாய் பதித்தேன் ;
எழுத்துகளால் காகிதங்களை காதலித்தேன் ,
என் மனம் குளிர்ந்ததை கண்டேன் ;
இதை தொடரச் செய்தேன் ,
எனக்கெனவே கொண்டேன் முதன் முறையாக ;
மனநிறைவாக சில இயற்றினேன் ,
என் பொழுதுபோக்கு ஆசையாக மாறியது ;
எழுதினேன் எழுதினேன் முழுமனதாய் ,
முழு மதியையும் வருணித்து எழுதினேன் ;
அற்புதமாக வருணனைத்து கொட்டினேன் ,
என் சொற்கள் கவிதைகளானதை சிநேகித்தேன் ;
ஓடும் காலம் நிற்கவில்லை ,
எழுத தொடங்கி வருடம் கழிந்தது ;
எனது வார்த்தைகளை ரசித்தேன் ,
என்னை நானே கண்டு வியந்தேன் ;
சேமித்த என் கவிதைகளை ,
எனது புதுமையான காதலென்று கருதினேன் ;
அன்று பொழுதுபோக்கு ஆசையானது ,
இன்று காதலாகி என்னை வென்றது.
From scribbling your thoughts on little scraps of paper to weaving them into poems that speak straight from the heart — it’s beautiful to see how much love and soul you pour into every word. This passion of yours is truly something special.