கல்லறைப் பூக்கள் – Delhi Poetry Slam

கல்லறைப் பூக்கள்

By Joseph George Williams

கண்ணே கசங்கிய மலரென ஊரும் உறவும் தூற்ற ;
உன்னுடன் கழித்த சில உன்னதக்காலங்களை கொண்டு,
உன் உள்ளத்தின் வெண்மையின், மென்மையின், தூய்மையின் தூண்டுதலால் என் இதய யாழை மீட்ட சொன்ன இந்த வேளையில்;
அண்ணன் மார்க்கும், தமையன்மார்க்கும், பயந்த உன் கரங்கள், அன்னியனுக்கு மாலை அணிவித்ததே.  
அன்று உன்னில் நான் என்னில் நீ என்று முணு முணுத்த உன் உதடுகள் இன்று ஊரார்க்கு பயந்து ஊமை ஆகி விட்டதே; காலத்தின் சுழற்சியினால் என் கரிய இனிய இதழ்களின் செழுமையின் வருடல்களும் காற்றென கரைந்ததேன்; தேவி உனக்குப் பூச்சூட்ட நான் தேவையில்லை என்றாகிவிட்ட இவ்வேளையிலும் எனக்குப் பூ போட நீ எனக்கு கண்டிப்பாக தேவை; அன்னாளில் தன்னவன் என்று உன் உள்ளக்கோயிலில் வைத்து போற்றிய இவன் தரணியில் கிடத்தப்படும் பொழுதாவது தயவு செய்து தாராளமாக கண்ணீர் விடு;  தமையன்மாரை கண்டு தயங்காதே;
 உன் மஞ்சள் வதனத்தையும் மங்கல மாங்கல்ய திலகத்தையும் மறக்காமல் மடிந்த இவன் இமைகளுக்கு காண்பிப்பாயாயின் ;
கண்டிப்பாக புண்பட்ட இவன் நிலப் பூக்கள் புன்னகையுடன் உங்கள் இருவருக்கும் வாழ்த்து கூறும.


Leave a comment