By Gowtham Kr Gandhi
ஒரு வாசல், ஒரு சன்னல், வெறும் ஓடு
என முக்கோணம் செவ்வகம்
கொண்டு கட்டப்பட்ட
‘முதல்’ வீடு …
ஆற்றங்கரையோர ஆலமரம்
மலைகளுக்கு நடுவில் சூரியன்
ஆற்றின் நடுவில் ஆளில்லா ஒரு படகு
என ஊதா நிறத்தில்
மட்டுமே தீட்டப்பட்ட
‘முதல்’ இயற்கை காட்சி ஓவியம்…
சேலையுடன்
திடீர் காதலியின்
‘முதல்’ முழு உருவம்…
எழுதி அடிக்கப்பட்டிருந்த
அவள் பெயர்…
சத்தமின்றி
வகுப்பு நேரத்தில் விளையாடிய
‘முதல்’ உள்ளரங்கு விளையாட்டு…
பழகி பழகி
இன்று மறந்தே போன
‘முதல்’ கையெழுத்து…
என அத்தனையும் தொடங்கியது
நோட்டு புத்தகத்தின்
‘கடைசி’ பக்கங்களில் தான்….