By Chitra Balraj

மனம் மயக்குதே இனிய சங்கீதம்,
மழலை பேச்சும் சங்கீதம்,
மனதின் காயம் ஆற்றிடும் சங்கீதம்,
மையல் கொள்ள வைக்குமே சங்கீதம்,
காதலிக்கு காதலனின் அன்பு சங்கீதம்,
கணவனுக்கு மனைவியின் கொலுசு சத்தம் சங்கீதம்,
கவிஞனுக்கு கேட்கும் நல்ல கருத்துக்கள் சங்கீதம்,
ஓவியனுக்கோ காணும் காட்சி எல்லாம் சங்கீதம்,
பூமிக்கு பொழியும் வான்மழை சங்கீதம்,
பூக்களுக்கோ வண்டுகளின் ரீங்காரம் சங்கீதம்,
உழைக்கும் உழவனுக்கு பயிர்களின் அசைவே சங்கீதம்,
உற்றார் உறவினருடன் ஒன்றி வாழ்வது சங்கீதம்,
எல்லோருடைய வாழ்விலும் பின்னி பிணைந்து இருக்கும் சங்கீதம்,
எனக்கு மிகவும் பிடிக்குமே இந்த சங்கீதம்,
சங்கீதம் இனிய சங்கீதம்!!!