By Dr. C. Chitra
நண்பன் என்று ஆனாய்
பின் காதல் சொல்லி போனாய்
காதல் கூடும் வேளை
மனம் துண்டாக்கி போனாய் !
அன்பே என் அன்பே !!
உன் கண் பார்வை போதும்
என் ஆயுள் கூடும்
நீ காணாமல் போனால்
என்னுயிர் சாகும்
அன்பே என் அன்பே !!
காதோரம் உன் பேச்சில் காதல் இல்லையா ?
களவாடிய எந்தன் நெஞ்சம் துடிக்க வில்லையா ?
கை சேர தவித்தேன் கைவிட்டாயே
நிழல் என்று நினைத்தேன் போய் விட்டாயே !
வாழ்வில் ஒரு பாதி இங்கு பள்ளமானதே
அதில் கண்ணீர் நிரம்பி வெள்ளம் ஓடுதே !
அன்பே என் அன்பே !!
நீ இல்லாத வாழ்விற்கு அர்த்தம் இல்லையே
களவு போன என் காதல் திரும்பி வரலையே
உடல் இங்கு இருக்கு உயிர் இல்லையே
உயிர் உன்னுடன் இருக்கு உனக்கு புரியலையே !
போராடி பார்த்தேன் - போய்விட்டாய் நீ
மன்றாடி பார்த்தேன் - மனம் உடைத்தாய் நீ
காதல் தீயில் என்னை பற்ற வைத்து
காற்றாய் போன உன் கதை என்னவோ ???
அன்பே என் அன்பே !!