"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..." – Delhi Poetry Slam

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..."

By Jayasree J

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

 

இது வள்ளுவரின் வாக்கு மட்டுமல்ல

உலக உயிர்களின் உன்னத உணர்வு!

 

பலவிதமான மனிதர்கள்!

பலவிதமான அன்புப் பகிர்வுகள்!

 

விழிகளின் தேடல் சொல்லும் அன்பினை!

தலையணையின் ஈரம் சொல்லும் அன்பினை!

 

உள்ளங்கையின் வெப்பம் சொல்லும் அன்பினை!

தொலைதூர நினைவுகள் சொல்லும் அன்பினை!

 

உணர்வுப் புரிதல்கள் சொல்லும் அன்பினை!

எதிர்பாராத சந்திப்புகள் சொல்லும் அன்பினை!

 

மனிதம் போற்றுவோம்!

அன்பினைப் பகிர்வோம் எந்நாளும்!

உண்மையாக !


2 comments

  • Really beautiful enjoyed it

    Mohammed Sajeed
  • Awesome really meaningful poem

    Magdaline

Leave a comment